Tamil Time New




புத்தரின் சிந்திக்கவைக்கும் சிந்தனைகள்

1. அடக்கம் இல்லாமல் ஒழுக்கம் கெட்டு நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட தியானம் செய்து ஒழுக்கத்துடன் ஒரு நாள் வாழ்ந்தவனுடைய வாழ்வு சிறப்பு உடையதாகும்.

2.அரிதான கொடிய ஆசையை அடக்கி வெல்பவனின் துயரங்கள் தாமரை இலை  மீது விழுந்த தண்ணீர் துளிகள் ஒட்டாமல் விலகி ஓடுவதைப் போல் அவனை விட்டு அகலும்.

3.இன்று நாம் என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான்.

4.பிறருக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையெனில், கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள்.

5.இறந்த காலத்தை எண்ணி வருந்தவும் வேண்டாம், எதிர்காலத்தை எண்ணி பயப்படவும் வேண்டாம். நிகழ்காலத்தில் மனதை வைத்து வாழுங்கள். மனம் , உடல் இரண்டும் நலமாகும்.

6.வாழ்வின் முடிவு என்பது அனைவருக்கும் பொதுவானது, எனவே  அதை கண்டு மிரளத்தேவையில்லை.         

Comments

Post a Comment